பறவைகள் எழுப்பும் – Paravaigal Eluppum Iniya Oli Lyrics

பறவைகள் எழுப்பும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பல்லவி்
பறவைகள் எழுப்பும் இனிய ஒலி
ஆனந்தம் தருகின்ற படைப்பின் ஒலி -2
பிதாவின் அமர்ந்த மெல்லிய சத்தம்
பேரின்பம் தருகின்ற அன்பின் ஒலி-2
அனு பல்லவி
படைப்பின் ஒலி ஆனந்தம்
படைத்தவர் ஒலியோ பேரானந்தம்.-2
அமர்ந்த மெல்லிய சத்தம் கேட்டு
அவர் பலத்த கைக்குள் அடங்கிடுவேன். -2
சரணம்
காட்டுப் புறா குருவிகள் பாடும் சத்தம்
தேசம் எங்கிலும் கேட்டிடுமே.-2
வல்லமையுள்ள கர்த்தரின் சத்தம்
வானத்தையும் அசைத்திடுமே-2 ( பறவைகள் )
2.களஞ்சியம் இல்லா காகங்களையும்
தினமும் போஷித்து வருகிறாரே-2
அவர் சாயலாகப் படைத்த நம்மை
கைவிடுவாரோ கருணைதேவன்-2 ( பறவைகள் )
3.பறவைகளோடும் உடன் படிக்கை
செய்தவர் வல்லக் கர்த்தர் தானே-2
அவரையே துதித்து ஆர்ப்பரித்து
இரட்சிப்பின் மீட்பை பெற்றிடுவேன் -2 ( பறவைகள் )