Holy Spirit Mashup Tamil Christian Songs lyrics

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Holy Spirit Mashup Tamil Christian Songs lyrics Part 2 by Nehemiah Roger
அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
எலும்புப் பள்ளத்தாக்கினில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்க்கதரிசனம் உரைத்திடவே
ஆவியின் வரங்களினால் என்னை நிரப்பிடும்
கனிகளை கொடுத்து சாட்சியாய் வாழ்ந்தும்மை மகிமைப்படுத்துவேன்
வல்லமை வல்லமை ஆவியே என்னை அனலாக்கிடும்
வல்லமை வல்லமை ஆவியே என்னை அபிஷேகியும்
ஏசாயா நாவை தொட்டது போல
எங்களின் நாவைத் தொட்டருளும்
யாரை நான் அனுப்புவேன் என்று சொன்னீரே
எங்களை அனுப்பும் தேசத்திற்கு
அக்கினி நெருப்பாய் இறங்கி வாரும்
அபிஷேகம் தந்து வழிநடத்தும்
கர்த்தர் ஆவி என்னில் அசைவாடிட
தாவீதைப்போல் பாடுவேன் பாடுவேன்
தாவீதைப்போல் பாடுவேன்
தரிசனம் வேண்டுமே தாகம் வேண்டுமே
தேசத்தை குறித்த கரிசனை வேண்டுமே (2)
என் பாத்திரம் நிரம்பி வழிந்திட
உங்க ஆவியை ஊற்றுமே
ஜெபம் செய்யும் நேரத்தை இன்னும்
கூட்டி உபவாச நாட்கள் இன்னும்
பெருக்கி கர்த்தரின் சித்தத்தை
நிறைவேற்றி மேலாக வாழ்வை
காட்டும் தேவ அக்கினி
பரலோக அக்கினி
பலிபீட அக்கினி
பட்சிக்கும் அக்கினி
பற்றிடும் அக்கினி
அற்புதங்கள் திரளாய் நடந்திடவே
அற்புதத்தின் ஆவியே வந்திடுமே
அந்தகார சங்கிலிகள் அறுந்திடவே
அக்கினியை ஊற்றிடுமே
வல்லமை வல்லமை தாருமே
தேசத்தை உமக்காய் கலக்கிட
அபிஷேகம் அபிஷேகம் ஊற்றுமே
அனல்கொண்டு உமக்காய் எழும்பிட
எலியாவை போல எழும்ப செய்திடும்
அக்கினி இறங்கும் வரை ஜெபிக்க செய்திடும்
சாத்தானை ஓட ஓட சுட்டெரிக்கணும்
தேசத்தை சுற்றி சுற்றி சுதந்தரிக்கணும்
ஊற்றும் ஊற்றும் உம் வல்லமை ஊற்றிடும்.
ஊற்றும் ஊற்றும் உம் அக்கினி ஊற்றிடும்
அந்தகார இருள் மட்டும் அகலவே
ஆவியின் மழையை ஊற்றுமே
அனலாய் நாமும் கொழுந்து விட்டெரிய
அக்கினி அபிஷேகம் ஊற்றுமையா
எழுப்புதலே எங்கள் வாஞ்சை
எழுப்புதல் தாரும் தேவா
பரிசுத்த ஆவியின் எழுப்புதல்
பரவட்டும் எங்கள் தேசத்தில்
நாம் போராடுவோம் நாம்
செல்லுவோம் போராடுவோம்
நாம் பெலவான்கள் இருளை மேற்கொள்ள
துதியினால் அந்த காரம் விலகிடுதே
We praise God for all the writers of these songs.
The Holy Spirit is a beautiful and powerful part of who God is. We need Him in our life as a conduit to become who God created us to be, and through His power we have aid in all situations. Without Him, we are powerless.
if the Spirit of him who raised Jesus from the dead is living in you, he who raised Christ from the dead will also give life to your mortal bodies because of his Spirit who lives in you.
‭‭
இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.
– ரோமர்‬ ‭8:11‬ | Romans‬ ‭8:11‬ ‭
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});