Idhuvarai Seidha Nanmaigal Lyrics

இதுவரை செய்த நன்மைகள்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தமிழ்:
பல்லவி:
இதுவரை செய்த நன்மைகள் இயேசு ஆயிரம்
இனிமேலும் செய்ய வல்லவர் என் தேவனும் – 2
இயேசுவின் அன்பு போதுமே
இயேசுவின் கிருபை போதுமே
இயேசுவின் மகிமை போதுமே எப்போதுமே – 2
இதுவரை செய்த நன்மைகள் இயேசு ஆயிரம்
இனிமேலும் செய்ய வல்லவர் என் தேவனும்
சரணம் 1:
விழியினில் வழியும் கண்ணீர் துளியை காண்பவரே
வழிகளில் எல்லாம் அன்பாய் காத்துக் கொண்டவரே – 2
கண்ணீர் எல்லாம் துடைப்பவர்
கவலைகள் எல்லாம் தீர்ப்பவர்
காலமெல்லாம் அவர் போதுமே எப்போதுமே
இதுவரை செய்த நன்மைகள் இயேசு ஆயிரம்
இனிமேலும் செய்ய வல்லவர் என் தேவனும்
சரணம் 2:
நம்பின உறவுகள் நம்மை விட்டுப்போனாலும்
நம்பின தேவன் என்றும் நம்மில் இருப்பாரே – 2
பயமும் திகிலும் விலகுமே
பாதைகளெல்லாம் வெளிச்சமே
பரிசுத்த தேவன் போதுமே எப்போதுமே
இதுவரை செய்த நன்மைகள் இயேசு ஆயிரம்
இனிமேலும் செய்ய வல்லவர் என் தேவனும்
சரணம் 3:
வேதனை சோதனை நம்மை சூழ்ந்து கொண்டாலும்
தேற்றிட தேவன் ஒருவர் உண்டு மறவாதே – 2
இதயத்தின் ஏக்கம் அறிந்தவர்
இனிமையானதைச் செய்பவர்
இரவிலும் பகலிலும் காப்பவர் அவர் போதுமே
இதுவரை செய்த நன்மைகள் இயேசு ஆயிரம்
இனிமேலும் செய்ய வல்லவர் என் தேவனும் – 2
இயேசுவின் அன்பு போதுமே
இயேசுவின் கிருபை போதுமே
இயேசுவின் மகிமை போதுமே எப்போதுமே