idhuve thagundha neram

இதுவே தகுந்த நேரம் இறை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இதுவே தகுந்த நேரம் (2)
இறைமகன் பிறந்திட்ட நேரம்
மாபரன் பிறப்பில் மகிழ்வுடன் கூடி
காணிக்கை ஈந்திடும் நேரம்
1. எளிய மாந்தரை மீட்டிட உலகில்
குழந்தையாய் இயேசு பிறந்தாரே
ஏங்கும் இதயங்கள் ஏற்றமே கண்ட
தியாகமாய் தம்மைத் தந்தாரே
உழைப்பின் கனிகளை கரமதில் ஏந்தி
பாதம் வருவீர் இணைவோம் கூடி
காணிக்கை யாவும் எடுத்து வந்தோம்
எம்மை காணிக்கை உம்மில் தந்தோம்
2.புதிய வாழ்வினை அளித்திட நமக்கு
வழியாக இயேசு பிறந்தாரே
பாவ வாழ்விலே விடுதலை தந்திட
ஒளியாக நம்மில் மலர்ந்தாரே
இறைவன் பிறப்பில் இன்னிசை பாடி
இதயம் மகிழ்ந்து இணைவோம் கூடி