idhuvum kadandhu pogum

இதுவும் கடந்து போகும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

LYRICS:
கர்த்தர் நம் பட்சத்தில், கர்த்தர் நம் பாதையில்
கர்த்தர் நம் படகினில் இருக்கையிலே
எதற்கும் கவலையில்லை பயமில்லையே
எதற்கும் கலக்கமில்லை பதட்டமில்லையே
(1)மலைகள் விலகினாலும்,
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
மரணத்தின் விளிம்பிலும், பாதாள வாசலிலும்,
மேற்கொள்ள விடாமல் விடுவிப்பாரே.
இதுவும் கடந்து போகும் , நன்மைக்கு ஏதுவாகும்
இதுவும் கடந்து போகும் நன்மைக்கேதுவாக மாறும்.
(2)நேசித்தோர் தள்ளினாலும், துரோகத்தால் தலைகுனிந்தாலும்,
உறவுகள் மறந்தாலும் ஊரார் உன்னை ஒதுக்கினாலும், தலை நிமிர செய்வார் தயங்காதே..
இதுவும் கடந்து போகும் , நன்மைக்கு ஏதுவாகும்
இதுவும் கடந்து போகும் நன்மைக்கேதுவாக மாறும்.
(3)நம்பிக்கை நீ இழக்காதே, நங்கூரமாய் இயேசு உண்டே,
நியமித்த காலத்தில் நிச்சயம் நிறைவேறும்,
கர்த்தர் உன் பட்சம் நின்று நிருபிப்பாரே,
இதுவும் கடந்து போகும் , நன்மைக்கு ஏதுவாகும்,
இதுவும் கடந்து போகும் நன்மைக்கேதுவாக மாறும்.