Ikkalathu Paadugal Inivarum Magimaiakku song lyrics

இக்காலத்துப் பாடுகள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இக்காலத்துப் பாடுகள்
இனிவரும் மகிமைக்கு
ஒப்பானது அல்ல
களி கூறுவோம் மகிழ்ந்திடுவோம்
ஆனந்தமாய் ஆர்ப்பரிப்போம்
பாடுகள் என்னை ஒன்றுமே
செய்திட முடியாதே
இயேசுவை உயர்த்திடுவோம்
1.காரணமில்லா நிந்தைகள்
பரிகாசங்கள் வந்தாலும்
கர்த்தருக்குள் என் ஆத்துமா
மேன்மை பாராட்டும்-இயேசு நல்லவரே
2.எல்லாவற்றையும் அவருக்கே
தெரிவித்தே நான் வாழுவேன்
தெய்வீக சமாதானம்
என் உள்ளத்திலே வாழும்- இயேசு வல்லவரே
3.நீதியினாலே துன்பம்
இயேசுவினிமித்தம் நிந்தை
பொய்யாகப் பலசொன்னால்
நான் பாக்கியவனாவேன்-இயேசு பெரியவரே