Illaramaam Solaiyilae

இல்லறமாம் சோலையிலே நல்லிறைவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இல்லறமாம் சோலையிலே
நல்லிறைவன் மாண்புடனே
எல்லையில்லா அருள் வழியும்
அன்பாம் மல்லிகையின் மணம் பெருகும்
1. அன்னை மரி மடியினிலே
ஆண்டவனின் சேய் உறங்கும்
முன்னணையின் திருக்குடும்பம்
முழுமையுள்ள மாதிரியாம்
2. தம்பதிகள் தோழமையில்
தேவனுடைய துணை விளங்கும்
நம்பி என்றும் இறையருளை
நாடுகையில் மாண்பிலங்கும்
3. பாலகனின் மழலையிலே
பரமனின் நல் மொழி ஒலிக்கும்
மூலவரே வரலாற்றில்
மூழ்கு பாதை எடுத்துரைக்கும்