illathin thalivaraai yesu irukiraar

இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இல்லத்தின் தலைவராய் இயேசு இருக்கிறார்
உள்ளத்தின் நேயராய் யாவும் கேட்கிறார்
மறைவான விருந்தினாராய் தினமும் வருகின்றார்
குடும்பத்தின் குறைகள் யாவும் அறிகிறார் – இயேசு
1.அள்ளி அணைப்பதாலே அன்னையாகுவார்
அடித்துத் திருத்துவதில் தந்தையாகுவார்
ஆபத்துக் காலத்திலே தோழனாகுவார்
வறுமை நேரத்திலே வள்ளலாகுவார் – இயேசு
2.துன்பங்கள் வரும்போது ஆறதலாவார்
தனிமையிலே தியங்கும் போது துணைவராகுவார்
காரிருளே சூழும்போது ஜோதி ஆகுவார்
கலங்கும் எந்தன் பாதையிலே காவலன் ஆவார் – இயேசு
3.இயேசு வந்த இல்லத்திலே சந்தோஷம் உண்டு
எல்லாவற்றிலேயும் அங்கு ஸ்தோத்திரம் உண்டு
இடைவிடாமல் ஏறெடுக்கும் ஜெபங்களும் உண்டு
ஆவியிலே நிறைந்திருக்கும் அனுபவம் உண்டு – இயேசு
4.வியாதி படுக்கையிலே வைத்தியராகுவார்
வேதனையைக் கண்டு தினமும் மனதுருகுவார்
காயங்களால் இன்று எந்தன் நோயைத் தீர்க்கிறார்
கவலையற்ற வாழ்க்கையினை கர்த்தர் தருகிறார் – இயேசு
5.மேகத்தின்மேல் இதோ இயேசு வருகிறார்
கணப்பொழுதில் மரித்தோர்கள் மீண்டும் எழும்புவார்கள்
கர்த்தரோடு நாமும் அன்று ஆகாயம் செல்வோம்
கண்ணீர் யாவும் மறந்து அவரில் ஆனந்தம் கொள்வோம்
பரமானந்தம் கொள்வோம் – இயேசு