immattum nataththineer kuraivillamal – Immattum Nadaththeeneer Kuraivillamal

இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல் – Immattum Nadaththeeneer Kuraivillamal
இம்மட்டும் நடத்தினீர் குறைவில்லாமல்
இனியும் நடத்துவீர் நன்மையினால்
வாக்கு மாறும் மனிதனல்ல
வார்த்தை மாறா என் தேவன்
1. செய்த நன்மைகள் ஏராளாமாயிரம்
எண்ணி முடியவே முடியாது
நினைத்து பார்க்க முடியாது
சொல்ல நாவுகள் போதாது
2. வாக்கு தத்தம் தந்தவரே
வார்த்தையினால்
என்னை நடத்தினீரே
சொன்னதையெல்லாம் செய்தவரே
சொல்லாததை நிறைவேற்றினீரே
3. யாராலும் செய்ய முடியாத காரியம்
உம்மாலே தானே செய்யக் கூடுமே
எனக்காய் யாவையும் செய்தவரே
செய்து என்றும் முடிப்பவரே