Inbaruku Bakaran Neer

இன்பக்ரு பாகரன் நீர்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

இன்பக்ரு பாகரன் நீர் இவ்வாண்டை உம்
அன்பின் ஈவாய் அருள்வீர்
அனுபல்லவி
துன்ப விருள் உறைந்தோர் பள்ளத் தாக்கிதில்
நின் கோலும் தடியும் கொண்டெந்நாளும் தேற்றிடும்
சரணங்கள்
1.நன்மை ஏதும் பெறவே-அபாத்திரர்
நல்கும் தயை உறவே
புன்மை மிகு பவத் தன்மைய ராயினும்
போந்த நலமெமக் கீந்த தயாளராம்
2. நம்புவோம் உம்மை மெய்யாய் – முழுவதும்
அன்போ டெந்நாளும் ஐயா
தம்புரான் உம் பதம் தாசர்க்கென்றும் ‘சதம்
தாதா! அருள் பிரசாதா! சருவேசுரா;
இன்பக்ரு பாகரன் நீர் பாடல் வரிகள், Inbaruku Bakaran Neer Lyrics