ini nashtangal ellam laabamaagum

இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இனி நஷ்டங்கள் எல்லாம் லாபமாகும்
இனி துக்கங்கள் சந்தோஷமாகும் – 2
என்னை காத்திடுபவரே
என்னை போற்றிடுபவரே – 2
1. இருதயம் நொருங்குண்டதே
மனசு தளர்ந்து போனதே – 2
எந்தன் கஷ்டத்தின் மத்தியில்
எந்தன் ஆறுதல் இயேசுவே – 2
2. செல்வங்கள் ஒழிந்து போனாலும்
எல்லாமே நஷ்டம் ஆனாலும் – 2
எந்தன் குறைவுகள் நிறைவாக்குவார்
எந்தன் இயேசு என்னோடுண்டு – 2