ini thamathamo naadha neer varave

இனி தாமதமோ நாதா நீர் வரவே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இனி தாமதமோ நாதா நீர் வரவே
கோடாகோடி தூதர் சங்கமாய் மேகத்தில்
ஆ…எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும்
என் ஆத்மநாதா உம் முகம் காணவே – 2
நிலையில்லா உலகில் பல துன்பங்கள் ஆ.. பெருமலைகள் போல் புரள்கின்றதே
பார் உலகினிலே பெருகிடுதைய்யோ பரிதாபமாம் மன சஞ்சலங்கள்
வந்து சேர்த்துக்கொள்வீர் என்னை நீர் வேகமாய் இன்னும் நோக்குகின்றேன் உம்மை நான் ஏகனாய் ஆ..எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும் என் ஆத்மநாதா உம் முகம் காணவே – 2
வாழ்கிறார் மனுஷர் நம்பிக்கையற்றே இளைப்புள்ளோராய் இப்பாருலகில்
வியாகுல சிந்தை பெருகுவதாலே நிற்பந்தராய் கண்ணீர் விடுகிறாரே
பூவில் அந்த காரம் மூடுதே என் நாதனே
அந்தோ சிந்திக்கையில் என்ன பரிதாபமோ
ஆ..எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும் என் ஆத்மநாதா உம் முகம் காணவே – 2
ஆதி விசுவாசம் தள்ளிய அனேகர் லோக சுகங்கள் தேடுகின்றார் தியாகிகளான சகோதரர் கூட்டம் பதவிகள் தேடி அலைகிறன்றாரே
ஐயா விசுவாச ஜீவியம் காத்துமே உம் வருகையில் நானும் வந்து சேரவே
ஆ..எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும் என் ஆத்மநாதா உம் முகம் காணவே – 2
நீதியின் சூர்யா இயேசு மகேசா உதித்திட காலம் ஆகிடுமோ
உமது மகிமையை நான் அனிந்திடவே பொங்குதே என்னுள்ளம் அனுதினமும்
தேவா காரிருள் முற்றிலும் மாற்றியே வாரீர் மின்னல் ஒளி என்றுமே வீசவே
ஆ..எத்தனை நாள் காத்து நான் பார்க்கணும் என் ஆத்மநாதா உம் முகம் காணவே.