Iniya Thamilil Yesuvai Paaduvean

இனிய தமிழில் இயேசுவை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இனிய தமிழில் இயேசுவைப் பாடு நீ (பாடுவேன்)
இதயம் கனிந்து நேசரைத் துதித்தே (துதிப்பேன்)
சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகர் அவர் உலகத்தையே தாங்கிடும் சர்வ வல்லவர்
வானாதி வானங்களும் கொள்ளாதவர்-2
எந்தன் சின்ன இருதயத்தில் வாழ்பவர்
2.மனுக்குலம் காத்திட மனிதனாய் வந்தவர்
பாவங்கள் போக்கிட சிலுவையில் மரித்தவர்
மரணத்தை ஜெயித்தே உயிரோடு எழுந்தவர்
மன்னவன் இயேசு என்றும் வாழ்கிறார்