Innum Orumurai Ennai

இன்னும் ஒருமுறை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இன்னும் ஒருமுறை என்னை மன்னியுமே
உம் பாதையை, விட்டு விலகினேன்
இன்னும் ஒருமுறை என்னை நிரப்பிடுமே
உமக்காக, உம் மகிமைக்காக
(Bridge)
எதிரியின் கோட்டையில்
மடிந்திட மனமில்லை
நேசரே என்னை விடுவித்து – உம்
மந்தையில் சேர்த்திடுமே
(1)
பாவத்தில் நான் வாழ்ந்தவன்
சுயத்திலே நான் சாய்ந்தவன்- உம்
திட்டத்தை நான் thoலைத்தவன்
என்னை மன்னியுமே
(2)
உம் நாமத்தை நான் அறிந்தவன்- உம்
வார்த்தையை நான் ருசித்தவன்
சோதனை வேளையில் – உம்
தஞ்சம் கொண்டேனே
(3)
பிள்ளையாய் என்னை அழைத்தீரே – என்
பிழையால் உம்மை இழந்தேனே- என்
கண்களை இழந்த பின்
உம்மை காண்கின்றேன்
(Our Life Should not come to an end without finishing the will of our Father God- Let us ask now with prayers like Samson by surrendering us completely)