Innum Thuthippen Innum Potruven

இன்னும் துதிப்பேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன் – 2
எக்காலமும் நான் துதிப்பேன்
எந்நேரமும் நான் போற்றுவேன் – 2
1. வியாதியின் வேதனை பெருகினாலும்
மரணத்தின் பயம் என்னை சூழ்ந்தாலும் – 2
மீண்டும் எழுப்பிடுவீர் பெலன் கொடுத்திடுவீர்
உந்தன் தழும்புகளால் குணமாக்கிடுவீர் – 2
2. நம்பிக்கை யாவுமே இழந்தாலும்
எல்லாமே முடிந்தது என்றாலும் – 2
எந்தன் கல்லறையின் கல்லை புரட்டிடுவீர்
என்னை மறுபடியும் உயிர்த்தெழும்பச் செய்வீர் – 2
Bridge
நல்லவர் வல்லவர்
சர்வ வல்லவர் – 4
இன்னும் துதிப்பேன் இன்னும் போற்றுவேன்
இன்னும் உம்மை ஆராதிப்பேன்
Additional Verse:
3. தனிமையின் எண்ணங்கள் சூழ்ந்தாலும்
கண்ணீரே படுக்கையாய் மாறினாலும் – 2
என்னை அரவணைத்து கட்டியெழுப்பிடுவீர்
நான் இழந்தவற்றை இரட்டிப்பாய் தருவீர் – 2
இன்னும் துதிப்பேன் பாடல் வரிகள், Innum Thuthipaen Lyrics