inthiya vazhka inthiya, inthiya namathu inthiya

இந்தியா வாழ்க இந்தியா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா
நூறு கோடி ஜனங்கள் வாழும் எங்கள் இந்தியா
ஏழு லட்சம் கிராமம் உண்டு எங்கள் இந்தியா
இருபத்தெட்டு மாநிலங்கள் கொண்ட இந்தியா
அந்த இந்தியாவில் இரட்சிப்பு மலர வேண்டுமே
ஊழியம் செய்திடவே எழும்பிடுவோம்
திரள் திரளாய் ஆத்துமாக்கள் சேர்த்திடுவோம்
தெய்வ பக்தி கொண்ட மக்கள் இந்தியர்களே
ஜீவனுள்ள தேவனை அறியச் செய்திடுவோம்
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா
அழிகின்ற ஆத்துமாக்கள் ஏராளமே – இயேசுவை
அறியாமல் நரகம் செல்வோர் ஏராளமே
இயேசுவால் இரட்சிப்பு என்று முழங்கிடுவோம்
அவர் இரத்தத்தில் மன்னிப்பு உண்டு சொல்லிடுவோம்
இந்தியா வாழ்க இந்தியா, இந்தியா நமது இந்தியா