Ippothum Eppothum

இப்போதும் எப்போதும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

இப்போதும் எப்போதும் எல்லாவற்றிற்காகவும்
தந்தையாம் கடவுளுக்கு துதிபலி செலுத்திடு
துதிபலி (அது) சுகந்த வாசனை
நன்றி பலி அது உகந்த காணிக்கை
1. எல்லா மனிதருக்கும் இரட்சிப்பு தருகின்ற
தேவனின் கிருபையே பிரசன்னமானீரே
துதிக்கிறேன் தூயவரே
போற்றுகிறேன் புண்ணியரே
2.தீய நாட்டங்கள் உலகு சார்ந்தவைகள்
வெறுக்கச் செய்திரே வெற்றியும் தந்தீரே
3.நெறிகேடு அனைத்தினின்றும் மீட்பு தந்தீரய்யா
செயல் செய்வதற்கு ஆர்வம் தந்தீரய்யா
4.தேவ பக்தியுடன், தெளிந்த புத்தியோடு
இம்மையில் வாழ்வதற்கு பயிற்சி தருகின்றீர்
5.சொந்த மகன் தூய்மையாக்கிடவே
உம்மையே பலியாக ஒப்படைத்தீர் சிலுவையிலே
6.மறுஜென்ம முழுக்கினாலும் புதிதாக்கும் ஆவியாலும்
இரட்சித்துக் கழுவினீரே மிகுந்த இரக்கத்தினால்
7. நீதிமான் ஆக்கினீர் உமது கிருபையினால்
நித்திய ஜீவன் தந்தீரே நிரந்தரப் பரிசாக
இப்போதும் எப்போதும் – ippothum eppothum lyrics , jebathotta jeyageethangal vol 28 lyrics in tamil , jebathotta jeyageethangal vol 28 songs