irai paramarippu annaiye – Iraiparamarippu Annaiye

இறை பராமரிப்பு அன்னையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.

இறை பராமரிப்பு அன்னையே – Iraiparamarippu Annaiye
இறை பராமரிப்பு அன்னையே
கண்கள் தேடுது உன்னையே – 2
கண்ணின் மணியாய் என்னை காத்திடும்
உந்தன் அருளால் என்னை நிரப்பிடும்
இறைவனின் தாயே — 2
அன்பு அன்னையாய் கரத்தில் சுமந்து நீ
என்னை நோக்கும் போது
உந்தன் கரங்களில் உள்ளம் மகிழ்ந்து நான்
உம்மை நோக்குகின்றேன் – 2
இதயத்தின் துடிப்பை நீ உயிருக்கு சுவாசம் நீ
குருதியின் நாளம் நீ அன்னையே -2
சகாய மாதாவே அமல உற்பவியே
துன்ப துயரத்தில் ஏழை எங்களின்
கண்ணீரைத் துடைத்திடுமே
தூய லீலி மலர் வானின் வெள்ளி மலர்
வாழ்வின் வசந்த மலரே
இறைவன் தாயும் நீ உலகின் தாயும் நீ
உண்மை வாழ்த்துகின்றோம் – 2
உன் அருள் தேடியே உன் முகம் பார்க்கையில்
என் சுமை தீருமே அன்னையே
வியாகுல மாமரியே உழைப்பின் தாய்மரியே
உம்மை நம்பியே வாழும் மக்களின் துணையாய் இருப்பாயே