iraimakkale nalla ithayangkale – Iraimakkalae Nalla Idhayanglae

இறைமக்களே நல்ல இதயங்களே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இறைமக்களே நல்ல இதயங்களே – Iraimakkalae Nalla Idhayanglae
இறைமக்களே நல்ல இதயங்களே வாருங்கள் வாருங்கள்
இறை இல்லம் செல்வோம் – 2
ஆண்டவர் வழியை தயாரிப்போம் கடவுளின் வரவை
செம்மை செய்வோம் – 2
1.இவரே நம் கடவுள் என்று சொல்வோம் இவரே நம் ஆண்டவர் என்று சொல்வோம் இவருக்கே நாம் என்றும் காத்திருந்தோம்
இவர்தரும் மீட்பை நாம் பார்த்திருந்தோம்
நம்மைப் படைத்தவரே ஆற்றலோடு வந்து நம்மை ஆள்பவரே மாட்சியோடு இங்கு நம்மை காப்பவரே மகிமையோடு
இன்று நம் முன்னே இருக்கின்றார் – 2
2.நிறைவாழ்வு ஆற்றலாய் நிறைந்தோடவே நம் வெற்றி கடல் அலையாய் பாய்ந்தோடவே நம் முகம் மகிழ்வாலே மலர்ந்திடவே
நம் நெஞ்சம் இன்பத்தால் நிறைந்திடவே
மண்ணில் பிறந்தோர்க்கு நற்செய்தி கூறிட வாழ்வை இழந்தோர்க்கு நல்வாழ்வை வழங்கிட அடிமையில் இருப்போர்க்கு விடுதலை அளித்திட
நம் இயேசு பிறந்துவிட்டார் – 2