iraivan inaiyarra isaikkalainyan

இறைவன் இணையற்ற இசைக்கலைஞன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இறைவன் இணையற்ற இசைக்கலைஞன்
இசைத்தான் இயற்கையின் இயல்பினிலே
இளந்தென்றல் இனிமையிலே
இரைந்திடும் இறையொலியை
இதமாய், இசையாய், இழைத்தான்
இறையே இசையாய் இசைந்திடவே
காற்றின் மௌனத்திலும் மெல்லிசை மறைத்தான்
காந்தள் மலர்தலிலும் நுண்ணிசை நுழைத்தான்
முகிலும் வேலியும் புணரும் இசை மழையாக்கினான்
மழுவும் நிலம் வருடும் இசை அலையாக்கினான்
இறையே இசையானான் இயற்கையிலே
தாயின் உதரத்திலும் உயிரிசை ஒளித்தான்
தாங்கும் தரணியிலும் மண்ணிசை விதைத்தான்
உலகும் உறவும் கூடும் இசை உணர்வாக்கினான்
உடலும் உளமும் உருகும் இசை உயிராக்கினான்
இறையே இசையானான் இயற்கையிலே
இயல் & இசை: அருள்பணி. ஜோசப் அரா க.ச.