iraththame sinthi meettire

இரத்தமே சிந்தி மீட்டிரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Good Friday Songs collection.

இரத்தமே சிந்தி மீட்டிரே
பாவங்களை மன்னிக்கவே
இரத்தமே சிந்தி மீட்டிரே – எங்கள்
பாவங்களை மன்னிக்கவே
இரத்தமே தூய இரத்தமே
பாவ கறைகள் போக்கும் இரத்தமே – 2
1) சிரசில் முள்முடி சூட்டியே
சிந்தனை அனைத்தையும் கழுவினீரே
அடிமை தனத்தினை நீக்கியே
பொற்கீரீடம் எனக்கு சூட்டினீரே
கைகளில் கால்களில் ஆணிகள்
கடாவி தண்டிக்கபட்டவராய் தோன்றினீரே
இவ்வளவு நேசித்தீரே என்மீது
அன்பு கூர்ந்திங்களே-2
என்னில் அன்பு கூர்ந்திங்களே 2 ( இரத்தமே)
2) கசப்பு காடியை தாகத்துக்கு
உமக்கு குடிக்க கொடுத்தனரே
எனது தாகத்துக்கு உம் இரத்தம்
பாணமாக வார்த்திங்களே
பாவங்கள் போக்கிடவே
சாபங்கள் நீக்கிடவே
எம்மை முற்றிலும் கழுவிடவே
சிலுவை மரத்தில் தொங்கினீரே
பிதாவின் சித்தம் நிறைவேற்றினீரே 2- இரத்தமே
இரத்தமே சிந்தி மீட்டிரே பாடல் வரிகள், Raththamae Sinthi meetterae Lyrics