Irupavarum Irunthavarum

இருப்பவரும் இருந்தவரும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இருப்பவரும் இருந்தவரும் மீண்டும் வருபவரே
அல்பாவும் ஒமேகாவும் ஆதியும் அந்தமுமே
நீர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே உம்மை ஓயாமல் நுதித்திடுவோம் நீர் மரித்து உயிர்த்து எழுந்தவரே உம்மை ஆராதனை செய்கிறோம்
வலக்கரத்தில் சபைகளையே ஏந்தி நிற்பவரே
இருபுறமும் கருக்குள்ள பட்டயம் உடையவரே
உம் கண்கள் அக்கினி ஜுவாலையாக எம்மைப் பார்க்கின்றதே – என்
நாவுகள் கர்த்தரே தேவனென்று அறிக்கை செய்கின்றதே
முந்தினவர் பிந்தினவர் சகலத்தின் அதிபதியே
சபை நடுவில் வல்லமையாய் உலாவும் தெய்வமே
உம் சிரசு உறைந்த மழைபோல வெண்மையாய் ஜொலிக்கிறதே உம் பாதங்கள் உலைக்கள வெண்கலம்போல் பிரகாசம் வீசிடுதே
தாவீதின் திறவுகோலை கைகளில் உடையவரே
மரித்தவரே உயிர்த்தவரே உயிரோடு இருப்பவரே
உம் சத்தம் பெருவெள்ள இரைச்சல்போல எம் காதில் தொனிக்கின்றதே – உமக்கு மகிமை கனமும் ஸ்தோத்திரமும்
என்றென்றும் செலுத்திடுவோம்.