iruthayaththai aaraynthu ariyum – Irudhayathai Aaraindhu Ariyum

இருதயத்தை ஆராய்ந்து அறியும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இருதயத்தை ஆராய்ந்து அறியும் – Irudhayathai Aaraindhu Ariyum
இருதயத்தை ஆராய்ந்து
அறியும் தேவனே
என் வழிகளுக்கும் செய்கைக்குந்தக்க
பலனை தருபவரே
என் நினைவுகளை தூரத்திலிருந்து
அறிந்துக்கொள்பவரே
என்னை தாயின் கருவில் காப்பாற்றி
அதிசயம் செய்தவரே
வேதனை உண்டாக்கும் வழிகள்
என்னில் உண்டோ பார்த்தருளும்
உம் நித்திய வழியிலே
என்னை நடத்தும், சீர்ப்படுத்தும்
எனை கருவில் கண்ட கண்கள்
என் இதயத்தை பார்க்கவே
உள்ளப் பெருமை எல்லாம்
முற்றும் அழிந்தே போகுமே
சுத்த இருதயத்தை
என்னில் சிருஷ்டிக்க வேண்டுமே
பரிசுத்த ஆவியே
என்னை தாங்க வேண்டுமே
வேதனை உண்டாக்கும் வழிகள்
நிர்மூலமாகாமலே
என்னை காத்த கிருபையே
முடிவில்லா இரக்கத்தை
காண்பித்த தெய்வமே
உம்மை பின்பற்றியே
நான் வாழ்ந்திட வேண்டுமே
திரும்பி பார்க்காமலே
உம்மை தொடர்ந்திட வேண்டுமே
வேதனை உண்டாக்கும் வழிகள்