Isravele Bhayapadathe tamil christian song lyrics

இஸ்ரவேலே பயப்படாதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Jebathotta Jeyageethangal collection.

இஸ்ரவேலே பயப்படாதே
நானேஉன் தேவன்
அரணும் சுகமும் பெலனும் நானே
உன்னை நானே உருவாக்கினேன்
என்னையல்லால் தேவன் இல்லை
எதற்குமே நீ அஞ்சிடாதே எண்ணி
எதையும் கலங்கிடாதே
தெரிந்து கொண்டேன் நீ என் தாசன்
திக்கற்றோராய் கைவிடேனே
தாய் தன் சேயை மறந்த போதும்
மறப்பதில்லை உன்னை நானே
ஆறுகளை நீ கடக்கும்போது
அவைகள் உன் மேல் புரள்வதில்லை
அக்கினியில் நீ நடக்கும்போது
அவைகள் உன் மேல் பற்றிடாதே
சிறுமந்தையே பயப்படாதே
சீக்கிரமாய் வந்திடுவேன்
சீயோனிலே உயர்த்தி உந்தன்
பேரை பெருமை படுத்திடுவேன்