isravelin thevanakiya karththarukku – Isrealin Devanagiya kartharukku

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு – Isrealin Devanagiya kartharukku
சகரியாவின் கீதம் (Benedictus)
1.இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு: ஸ்தோத்திரமுண்டாவதாக.
2.அவர் நம்முடைய பிதாக்களுக்கு: வாக்குத்தத்தம் பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்: தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை: நினைத்தருளி,
3.உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு: உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று,
4.அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்;
5.ஆதி முதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால்: தாம் சொன்னபடியே,
6.தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு: நம்முடைய சத்துருக்களினின்றும் நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும் நம்மை இரட்சிக்கும்படிக்கு,
7.தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே: நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார்.
8. நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்: நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும்,
9.நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே, அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும்: அவருக்கு முன்னாக நடந்து போவாய்.
10.அந்தகாரத்திலும் மரண இருளிலும்: உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும்,
11.நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும்: அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.
12.பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக.
13.ஆதியிலும் இப்பொழுதும் எப்பொழுதுமான சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
லூக்கா 2 : 68-71