ithu engkal paratham

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இது எங்கள் பாரதம்
இந்தியன் என்று சொல்வோம்
அந்த சொல்லில் பெருமிதம் கொள்வோம்
தீங்கற்ற தேசம் படைக்க
நம் கைகளை இணைத்துக் கொள்வோம்!
நம் மொழிகள் வேறாயினும்
நம் ஒரு தாய் மக்களே
நம் நிறங்கள் வேறாயினும்
நம்மில் வேற்றுமையில்லையே
எங்கள் பாரதம்
இது எங்கள் பாரதம்
யுத்தங்கள் மாறணும்
சமாதானம் பிறக்கணும்
ஜாதி வேற்றுமை இல்லாமல் – நாம்
ஒன்றாய் வாழணும்
இளைஞர் சமுதாயம்
இன்றே எழுந்து
நீதியை நாட்டணும்
நம் தேசத்தை உயர்த்தணும்