ithu karththarale vantha kariyam

இது கர்த்தராலே வந்த காரியம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இது கர்த்தராலே வந்த காரியம்
நாமெல்லாம் ஒன்றாகக் களிகூருவோம்
ரெபேக்காளை ஈசாக்கோடு
இணைத்திட்ட தேவன் இவர்களையும் இணைத்தார்
நாம் களிகூருவோம்
களிகூருவோம் – 2
இது கர்த்தராலே வந்த காரியம்
நாம் வாழ்த்திடுவோம்
வாழ்த்திடுவோம்
கர்த்தராலே வந்த காரியம்
சகோதரியே மணவாட்டியே
நீ கோடா கோடியாய்ப் பெருகிட
வாழ்த்துகிறோம்
சகோதரனே மணவாளனே
நீ கோடா கோடியாய்ப் பெருகிடவே
வாழ்த்துகிறோம்
உன் பிள்ளைகள் பகைவர்களின்
வாசஸ்தலங்களை என்றும்
சுதந்தரிப்பார்
உன் சந்ததி பகைவர்களின்
வாசஸ்தலங்களை என்றும்
சுதந்தரிப்பார்
வானத்திலும் பூமியிலும்
உண்டாகும் நன்மைகள்
என்றும் உனக்கு சொந்தம்
வல்லவரின் வார்த்தைகளோ
வாழ்நாட்கள் எல்லாம்
உன்னை வழிநடத்தும்