Ithuvum Kadanthu Pogum ithuvum katanthu pookum

கர்த்தர் நம் பட்சத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Ithuvum Kadanthu Pogum இதுவும் கடந்து போகும்
கர்த்தர் நம் பட்சத்தில், கர்த்தர் நம் பாதையில்
கர்த்தர் நம் படகினில் இருக்கையிலே
எதற்கும் கவலையில்லை பயமில்லையே
எதற்கும் கலக்கமில்லை பதட்டமில்லையே
1.மலைகள் விலகினாலும்,
பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்
மரணத்தின் விளிம்பிலும், பாதாள வாசலிலும்,
மேற்கொள்ள விடாமல் விடுவிப்பாரே.
இதுவும் கடந்து போகும் , நன்மைக்கு ஏதுவாகும்
இதுவும் கடந்து போகும் நன்மைக்கேதுவாக மாறும்.
2.நேசித்தோர் தள்ளினாலும், துரோகத்தால் தலைகுனிந்தாலும்,
உறவுகள் மறந்தாலும் ஊரார் உன்னை ஒதுக்கினாலும்,
தலை நிமிர செய்வார் தயங்காதே..
இதுவும் கடந்து போகும் , நன்மைக்கு ஏதுவாகும்
இதுவும் கடந்து போகும் நன்மைக்கேதுவாக மாறும்.
3.நம்பிக்கை நீ இழக்காதே, நங்கூரமாய் இயேசு உண்டே,
நியமித்த காலத்தில் நிச்சயம் நிறைவேறும்,
கர்த்தர் உன் பட்சம் நின்று நிருபிப்பாரே,
இதுவும் கடந்து போகும் , நன்மைக்கு ஏதுவாகும்,
இதுவும் கடந்து போகும் நன்மைக்கேதுவாக மாறும்.