ivvealaikaaga baliyana

இவ்வேழைக்காக பலியான

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Gnanapaadalgal and Paamalaigal collection.

1.இவ்வேளைக்காக பலியான
என் யேசுவின் மகா தயை,
நான் என்றும் நிற்கத்தக்கதான
உறுதியான கன்மலை;
விண்மண் ஒழிந்தும், இதுவே
அசைவில்லாமல் நிற்குமே.
2.அவர் அனைவருக்குமாக
மீட்கும் பொருளைத் தந்தாரே;
குணப்படும் எல்லாருக்காக
பாவமன்னிப்புண்டாகுமே
ஆ! யேசுவால் உண்டானது
அளவில்லாத தயவு.
3.ஆ! அவருக்குப் பக்தியாக
நான் என்னை ஒப்புவிக்கிறேன்;
திகில் என் பாவங்களுக்காக
வந்தால், அவரை நோக்குவேன்;
அப்போதவர் என் பேரிலே
இரக்கமாய்க் கண்வைப்பாரே.
4.இம்மண்ணில் துன்பம் தொல்லையாலும்
நான் மெத்த வாதிக்கப்பட்டால்
தினம் பல வருத்தத்தாலும்
என் பாரம் மிகுதியானால்
என் யேசுவின் இரக்கமே
என் ஆத்துமத்தைத் தேற்றுதே.
5.நான் ஜீவனோடிருக்குமட்டும்
கர்த்தாவே நீர் என் நம்பிக்கை;
என் விசுவாசம் உம்மைப்பற்றும்,
இதே என் பிரதிக்கினை;
ஆம் என் அடைக்கலம் நீரே
இரக்கமுள்ள யேசுவே.