iyesu kiristhuval namakku jeyam jeyame

இயேசு கிறிஸ்துவால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு கிறிஸ்துவால் நமக்கு ஜெயம் ஜெயமே
தேவ ஆவியானவரால் என்றும் ஜெயம் ஜெயமே
நீ விஸ்வாச வீரனானால் ஜெயம் ஜெயமே
உன் நம்பிக்கையும் அவெரேயானால் ஜெயம் ஜெயமே
சரணம் – 1
அவரை நம்பி கடலில் நடந்தால் கடலும் கூட வழிவிடுமே
இல்ல அவரை பார்த்து நீ நடந்தால் அந்த கடலும் உன்னை தாங்கிடுமே
Hi காற்றே Hi காற்றே நீ காற்றை கூட அடக்கிடுவாய்
Hi கடலே Hi கடேலே நீ கடலை கூட அதட்டிடுவாய்
வானுயர்ந்த அலைகள் உன்னை முழுகமிலச்செய்தாலும்
இயேசுவின் நாமம் ஒன்றை சொல்ல ஜெயம் ஜெயமே
உனக்கு ஜெயம் ஜெயமே
நமக்கு ஜெயம் ஜெயமே
சரணம் – 2
சிங்க கெபியில் நீ விழுந்தால் அந்த சிங்கங்கள் கூட பயந்திடுமே
இல்ல சிங்கத்தின் வாயை கட்டிப்போட தேவ தூதர்கள் கூட்டம் விரைந்திடுமே
Hi பயமே Hi பயமா நீ பயத்துக்கு பயத்தை காட்டிடுவாய்
Hi ஜெயமே Hi ஜெயமே நீ ஜெயமாய் என்றும் வாழ்ந்திடுவாய்
கோலியாத்தை போல ராட்சசன் முன் நின்றாலும்
இயேசுவின் நாமம் ஒன்றை சொல்ல ஜெயம் ஜெயமே