iyesu piranthar meetpu vanthathu

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

இயேசு பிறந்தார் மீட்பு வந்தது
உள்ளம் எழுந்தார் அன்பு மலர்ந்தது
இல்லம் எங்கும் ஆசி பொங்க புதுமை கானுவோம்
1) தந்தை அன்பின் வார்த்தையோ
மரிமடியிலே பாலனாய்
மனிதனாக உறவை தேடுதே
புனிதனாக நாமும் வாழவே-2
அகம் மலர்ந்திட இகம் வளர்ந்திட
நிதம் மகிழ்ந்திடுவோம்
இருள் மறைந்திட அருள் நிறைந்திட தினம் புகழ்ந்திடுவோம்-2
நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2
2) வானதூதர் கீதமோ வயல்வெளியில் கேட்குதே
இடையரோடு குடிலை தேடுதே
இறைமகனை புவியில் கானவே-2
ஒளி எழுந்திட துயில் விலகிட
நிதம் உழைத்திடுவோம்
வழி பிறந்திட புவி உயர்ந்திட
கரம் இனைந்திடவோம்-2
நாம் பாடுவோம் பாலன் அன்பையே தேடுவோம் -2
இயேசு பிறந்தார் மீட்பு வந்தது பாடல் வரிகள், Yesu Piranthaar Meetpu vanthathu lyrics