iyesu unnil iruppathale azhakan nee azhakan – (2)

இயேசு உன்னில் இருப்பதாலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசு உன்னில் இருப்பதாலே அழகன் நீ அழகன் – (2)
கறுப்பானாலும் அழகன் சிவப்பானாலும் அழகன்
எப்படியாயினும் அழகன் இயேசுவுக்கு அழகன்
கறுப்பானாலும் அழகன் சிவப்பானாலும் அழகன்
எப்படியாயினும் அழகன் இயேசுவுக்கு அழகன்
இயேசு உன்னில் இருப்பதாலே அழகன் பேரழகன்
1 – கறுப்பு என்றால் பாவம் என்று எண்ணி எண்ணி
வெம்பி வெம்பி நொந்து நொந்து சோர்ந்திடாதே
சோர்ந்திடாதே நீ சோர்ந்திடாதே
இயேசு தேவன் இன்று செங்குருதி கொண்டு
உன்னை பொன்னாய் மாற்ற நீயும் அழகன் ஆனாய்
இயேசு தேவன் இன்று செங்குருதி கொண்டு
உன்னை பொன்னாய் மாற்ற நீயும் அழகன் ஆனாய் – இயேசு உன்னில்
2 – வானம் அகலும் பூமி உருகும் பூவும் உதிரும் புல்லும் உலரும்
வேத வசனம் நிலைத்து நிற்கும் நீயும் நிலைத்து நிற்பாய்
தேகம் அழுகிப் போகும் தேவசாயல் அடைவாய்
இயேசுவோடே இருப்பாய் என்றென்றும் வாழ்வாய்
தேகம் அழுகிப் போகும் தேவசாயல் அடைவாய்
இயேசுவோடே இருப்பாய் என்றென்றும் வாழ்வாய் -இயேசு உன்னில்
இயேசு உன்னில் இருப்பதாலே பாடல் வரிகள், Yesu unnil iruppathalae lyrics