iyesuve meyyana thevan

இயேசுவே மெய்யான தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே மெய்யான தேவன்
என்றென்றும் அவரே நம் தேவன் (2)
எதற்கும் பயப்படாதே ..
ஒன்றுக்கும் கலங்கிடாதே !! (2). – இயேசுவே
1.பெயர் சொல்லி அழைத்தவர் அல்லவா – உன்னை
கரம் நீட்டி அணைத்தவர் அல்லவா .. (2)
தாயைப்போல் நேசித்தவர் அல்லவா – உன்னை
தந்தைபோல் சுமந்தவர் அல்லவா (2). – இயேசுவே …
2.உன் பாவம் சுமந்தவர் அல்லவா – அவர்
உன் நோய்கள் தீர்த்தவர் அல்லவா (2)
உனக்காக மரித்தவர் அல்லவா – அவர்
உனக்காக உயிர்த்தவர் அல்லவா (2) – இயேசுவே
3.நித்திய கன்மலை அல்லவா
நீர் நீதியின் சூரியன் அல்லவா
மறுபடி வருவீர் அல்லவா
என்னை அழைத்து செல்வீர் அல்லவா
இயேசுவே மெய்யான தேவன் பாடல் வரிகள், Yesuve Meiyana Devan Lyrics