iyesuve vazhiyum saththiyamum

இயேசுவே வழியும் சத்தியமும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவே வழியும் சத்தியமும்
ஜீவனின் அதிபதியானவரே -2
சத்திய ஆவியானவரே
தேற்றி ஆற்றி நடத்துவாரே -2
அல்லேலூயா ஆராதனை
ஆராதனை அல்லேலூயா -2
ஏசாயா நாவைத் தொட்டது போல்
எங்கள் நாவைத் தொட்டருளும் -2
உமக்காய் எரிந்து பிரகாசிக்க
அக்கினி தீபமாய் மாற்றிடுமே -2
மேல்வீட்டறையில் இறங்கினீரே
பரிசுத்த ஆவியால் நிரப்பினீரே -2
அக்கினி மயமான நாவுகளால்
உலர்ந்த வாழ்கையை உயிர்பித்திரே -2