iyesuvin pinnal nanum selven

இயேசுவின் பின்னால் நானும்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

இயேசுவின் பின்னால் நானும் செல்வேன்
திரும்பி பார்க்க மாட்டேன் – (2)
சிலுவையே முன்னால் உலகமே பின்னால்
இயேசு சிந்திய குருதியினாலே விடுதலை அடைந்தேனே
அச்சமும் இல்லை அதிர்ச்சியும் இல்லை அடியேன் உள்ளத்திலே
ஆண்டவர் இயேசு அடைக்கல பாறை ஆதலின் குறையில்லை
ஆண்டவர் முன்னால் அகிலமே பின்னால் – (2)
அன்பர் இயேசுவின் வார்த்தையினாலே விடுதலை அடைந்தேனே
தாயும் அவரே தந்தையும் அவரே தரணியில் நமக்கெல்லாம்
சேயர்கள் நம்மை செவ்வழி நடத்தும் ஆயனும் அவரன்றோ
ஆயனே முன்னால் அலகையே பின்னால் – (2)
அழைக்கும் இயேசுவின் அன்பு மொழியிலே ஆறுதல் அடைந்தேனே