iyesuvukkaka ovvoru nalum vazhanum

இயேசுவுக்காக ஒவ்வொரு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

இயேசுவுக்காக ஒவ்வொரு நாளும் வாழணும்
தேவசித்தம் அறிந்து சொற்படி கேட்டு நடக்கணும்
சுயங்கள் எல்லாம் ஒவ்வொரு நாளும் சாகணும்
தேவ உறவிலேயே நிலைத்து வாழணும்
நதியோரம் இருக்கும் மரம்போல் வளரணும்
எல்லா நாளும் கனிகளோடு செழிக்கணும் -2
அன்புகொண்ட நெஞ்சமாக மாறணும் -2
ஆண்டவரோடு அனுதினமும் வாழணும் வாழணும்
காலைதோறும் கர்த்தரின் முகத்தைத் தேடணும் அவர் கிருபையால்
என்றென்றுமே நடக்கணும் -2
வேத வழியில் என்னாலும் நடக்கணும்-2
இயேசு எனக்கு ஜீவனாக மாறணும் மாறணும்
அன்பின் வழியில் எந்நாளும் நடக்கணும் ஆவியினால் பெலன் கொண்டு வளரணும் -2
நறுமணமாய் உலகில் வாசம் வீசணும் -2
நாள்தோறும் அவர் அன்பை சொல்லணும் சொல்லணும்.