jebikkum manithanae ezhumpiduvaai

ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜெபிக்கும் மனிதனே எழும்பிடுவாய்
ஜெபிக்கும் வாலிபனே புலம்பிடுவாய் -2
தேவனுக்காய் நீ எழும்பிடுவாய்
தேவனுக்காய் நீ புலம்பிடுவாய் -2
அழைக்கிறார் வந்திடுவாய் இயேசு உன்னை (2)
1. தீமைகள் பெருகிடும் நாட்கள் இதே
திறப்பிலே நிற்க நீ வந்திடுவாய்
சுனாமிகள் வரும் இந்நாட்களிலே
ஜெபநடை செய்ய நீ வந்திடுவாய்
மரணத்தை நீ தடுத்திடுவாய்
மரித்தவனை நீ எழுப்பிடுவாய்-2
இன்றே நீ வந்திடுவாய் இயேசு
உன்னை அழைக்கிறார் வந்திடுவாய் -2
2. யுத்தங்கள் தோன்றிடும் நாட்களிதே
தேசத்தை காத்திட வந்திடுவாய்
சமாதானம் தேடிடும் மனிதருக்காய்
சத்திய வார்த்தைகள் கூறிடுவாய்
அன்பு கொண்டு ஜெபித்திடுவாய்
ஆண்டவருக்காய் உழைத்திடுவாய்