jeeva thayaabaranae

ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜீவ தயாபரனே ஏகதிரித்துவனே
மேகமணாளனே தூங்கா மெய் தேவனே
வாரும் வாரும் என்னுள்ளில் வாரும்
தாரும் தாரும் ஜீவா ஆவி தாரும்
சோர்வான சமயங்களில்
என் தளர்வான நேரங்களில்
மலரான உந்தன் பாதம் அமர்ந்து
நான் அழுதிடுவேன்
தூற்றிடும் மனிதர்களின்
சாத்தானின் தந்திரங்கள்
சகித்திட பெலன் தாரும்
பொருத்திட கிருபை செய்யும்
சாவின் துக்கங்களில்
மரணத்தின் பள்ளங்ளில்
நீர் என்னோடு இருந்தீரானால்
எந்த ஆபத்தும் வந்திடுமோ
உடைந்த நேரங்களில்
உள்ளத்தின் சோர்வுகளில்
ஆற்றிடும் என் பாதமே
தேற்றிட வாருமைய்யா