jepikka jepikka manam puththam puthiya – Jebikka Jebikka Manam puththam puthiya

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய – Jebikka Jebikka Manam puththam puthiya
ஜெபிக்க ஜெபிக்க மனம் புத்தம் புதிய
நல்ல இருதயமாய் மாறும்
துதிக்க துதிக்க மனபாரம் நீங்கி
நம் துக்கமெல்லாம் தீரும்
கவலையெல்லாம் மறையும்
கண்ணீரெல்லாம் தீரும்
கழுகு போலப் புதுபெலன் அடைந்து
நம்மை பெலவானாய் மாற்றும்
இடைவிடா ஜெபத்தினால்
பெரும் தடைகளைத் தகர்த்திடலாம்
நாம் கருத்துடன் ஜெபிப்பதினால்
நம் கண்ணீரைத் துடைத்திடலாம்
ஊக்கமான ஜெபம் ஏக்கங்கள் தீர்க்கும்
வெற்றியைத் தந்திடும்
புது மனிதனாக்கி நல் கிருபைகள் தந்து
மகிமையில் சேர்த்திடும்
பெலவானாய் மாற்றிடும் சுகத்தை தந்திடும்
ஜெபத்தின் வல்லமையால்
நாம் சாத்தானை வென்றிடலாம்
துதியின் வல்லமையால்
பெரும் சதிகளை முறித்திடலாம்
ஜெபிக்கின்ற மனிதன் வெற்றியைப்
பெறுவான் தோல்விக்கு அஞ்சிடான்
கரடு முரடான வாழ்வைக் கூட
இலகுவாய் கடந்திடுவான்
கலங்கி நின்றிடான் கர்த்தரை மறந்திடான்
வேதம் சத்தியம் நமக்கு விடுதலை நிச்சயம்
ஆவியின் பாடல்கள் நம்மை
ஆற்றித் தேற்றிடும் கட்டுகள்
உடைக்கும் கவலைகள் தீர்க்கும்
கண்ணீரை துடைத்திடும்
நித்திய சத்திய சுத்த மகத்துவ
வழிதனைக் காட்டிடும்
வேதமே தீபம் ஜெபமே ஜெயம்