jothikalin pithaavae jeevanulla

ஜோதிகளின் பிதாவே ஜீவனுள்ள தேவனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஜோதிகளின் பிதாவே ஜீவனுள்ள தேவனே
ஜீவன் தந்தவரே ஜீவாதிபதியே (2)
ஜீவிய காலமெல்லாம் ஆராதிப்பேன்
1.வானம் உம் சிங்காசனம்"
பூமி உம் பாதபடி -2
வானாதி வானம் கொள்ளா
மகிமையுள்ளவர் நீர் -2
வாக்கு மாறாதவரே
வல்லமையுள்ளவரே -2
வாக்கினால் சொன்னதை
கரத்தால் நிறைவேற்றுவீரே -2
2. கல்வாரி நாயகனே
கருணையின் தேவன் நீரே
கண்ணீரின் பாதையெல்லாம்
களிப்பாய் மாற்றினீரே
வாஞ்சையாய் தேடுகிறேன்
நேசரை பாடுகிறேன்
வந்திடும் இயேசுவே
வருகை வரை காத்திருப்பேன்