kaalaiyil athikaalaiyil um thiru

காலையில் அதிகாலையில் உம் திரு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காலையில் அதிகாலையில்
உம் திரு முகத்தை தேடினேன்
வேளையில் இந்த வேளையில்
உம் ஆலயத்தில் துதிக்கிறேன் -2
தேவா வல்லமை தேவா பிரசன்னம்
என்னையும் நிரப்பட்டுமே -2
1. ஆசரிப்பு கூடாரத்தில்
இறங்கின அபிஷேகமே – ஆரோனின்
சிரசின் மேல் ஊற்றின அபிஷேகமே -2
இறங்கிட ஊற்றிடுமே
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல் -2
2. தெய்வீக கூடாரத்தில்
தேற்றின அபிஷேகமே – தேவனின்
பிரசன்னத்தில் நிரப்பின அபிஷேகமேற்
தேற்றிடுமே நிரப்பிடுமே
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்
3. பரலோக தூதர்கள் மேஅல் பொழிந்திடும்
அபிஷேகமே – பரிசுத்தவான்களின் மேல்
தங்கிடும் அபிஷேகமே
பொழிந்திடுமே தங்கிடுமே
என் ஆவி , ஆத்துமா , சரீரத்தின் மேல்