Kaalam Kadaisi Kaalam Lyrics

காலம் கடைசி காலம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காலம் கடைசி காலம் (Am) 95
கர்த்தர் இயேசு வரும் நேரம் ( 2 )
மணவாளன் இயேசு வந்திடுவார் மணவாட்டியே நீ ஆயத்தமா ?
மகிமையின் நாளும் நெருங்கிடும் போது மணவாளன் சத்தமும் தொனித்திடும்போது
நினையாத வேளையில் வந்து விடுவாரே என்ன செய்குவாய் ? -இன்றைய மகிபனை நம்பி வா.
பஞ்சம் கொள்ளைநோய் பாடுகள் எல்லாம் அவர் வருகையை தெரிவிக்கின்றதே
கொஞ்சம் காலமே இருக்குமென்றறிந்து தஞ்சம் அடைந்திடு இன்றே இயேசுவை நம்பிடு
மரித்தவர் முதலில் எழுந்திருப்பார்கள் உயிரோடு இருக்கும் பரிசுத்தரோடே பாவத்தின் பாதையில் பதுங்கி விடாதே பரமன் அழைக்கிறார் இன்றே இயேசுவை நம்பி வா.
திருடனைப் போல் அவர் வருகை இருக்கும் திருந்திடு வருகையில் அவர் பின் செல்ல
ஐயோ….. கைவிடப்பட்டாயனால்
எங்கு செல்லுவாய் ? இன்றே இயேசுவை நம்பி வா.