Kaanamal Pona Aattai Pola

காணாமல் போன ஆட்டைப் போல
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Kaanamal Pona Aattai Pola – காணாமல் போன ஆட்டைப் போல
காணாமல் போன ஆட்டைப் போல
வாழ்ந்தேனே இந்நாள் வரை
தேடி வந்தீர் என்னை தெரிந்துகொண்டீர்
பரிசுத்த வாழ்வை தந்தீர்
அன்பு உம் அன்பு
அள்விட முடியாதது
தூரமாய் சென்றேன் நான் உம்மை விட்டு – என்
அழைப்பினை மறந்தேன் உம் அன்பை விட்டு
கரம் பிடித்தீர் என்னைச் சேர்த்துக்கொண்டீர் – உம்
சமுகத்தில் எனக்கொரு இடம் கொடுத்தீர்
அன்பு உம் அன்பு
அளவிட முடியாதது
உலக மேன்மை அற்பம் என்று
உதறி நானும் தள்ளினேன்
உமக்காகவே நான் வாழ்ந்திடுவேன்
உம்மையே நான் என்றும் பின் செல்லுவேன்
அன்பு உம் அன்பு
அள்விட முடியாதது
வருந்தி சுமக்கும் இளைஞனே
வல்லவர் இயேசு அழைக்கிறார்
வாழவைப்பார் வாழ்வை வளமாக்குவார்
வந்திடுவாய் நீ இயேசுவிடம்
அன்பு உம் அன்பு
அளவிட முடியாதது