kaarirul nearam thanimaiyin kaalam

காரிருள் நேரம் தனிமையின் காலம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காரிருள் நேரம் தனிமையின் காலம்
கதறிடும் சூழல் பரவிடுதே
காத்திடும் கூட்டம் பரன் முகம் காண
பறந்திடும் ஆவல் பெருகிடுதே-2
பெலப்படு (2) கர்த்தரில் பெலப்படு
கருணையின் காலம் கடந்திடுதே
பெலப்படு (2) ஆவியில் பெலப்படு
கொடுமையின் காலம் நெருங்கிடுதே-2
1. கர்த்தருக்குள் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து
முதியோரை நேசித்து கனம் பண்ணி-2
முத்து நன்மை உண்டாகும் வாழ்வோடு
பூமியில் நீடித்து வாழ்ந்திடவே-2
2. தந்திர சாத்தானை எதிர்த்திடவே
திராணி உள்ளோராய் நிற்கும்படி
சர்வாயுத வர்க்கம் தரித்தோராய்
சகலமும் செய்து வாழ்ந்திடவே
3. கிறிஸ்துவின் ஸ்தானாதி பதியாக
சுவிசேஷ இரகசியம் அறிவித்திட
எல்லா சமயமும் தைரியமாய்
சத்திய சாட்சியாய் வாழ்ந்திடவே