Kadal Ennum Ulaghil

கடல் என்னும் உலகத்தில்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கடல் என்னும் உலகத்தில்
படகு என்னும் பயணத்தில்
கரை தேடி திரியும் மகனே
கடல் என்னும் உலகத்தில்
படகு என்னும் பயணத்தில
கரை தேடி திரியும் மகளே
கரைகள் நிறைந்த வாழ்வு
குறைகள் ஏராளம் ஏராளம்
அலைமோதும் அலைகளோ எங்கும்
என்னை மீட்க யாருமில்லை
எங்கும் திரும்ப இருள்
என்னை அமுழ்த்தி சூழ்ந்து கொள்ளுதே
வெள்ளிச்சம் தேடி கண்கள்
துடுப்பை பிடிக்க கரங்கள்
கரையை தேடி உள்ளம் இன்று ஏங்குதே
செய்வதறியாமல் நானும்
பயமும் திகைப்பும்
என்னை நெருக்கும் சூழ்நிலை இதுவோ
கண்டேன் கலங்கரை விளக்கை
கண்டேன் வெள்ளை சிங்காசனம்
கண்டேன் எந்தன் தகப்பனின் கண்களை
கடல் என்னும் உலகமோ
படகு என்னும் பயணமோ
பயமும் திகைப்பும் இல்லை அவர் என்னோடு
கடல் என்னும் உலகமோ
படகு என்னும் பயணமோ
பயமும் திகைப்பும் இல்லை அவர் உன்னோடு