Kadandhu Ponathe

காலங்கள் கடந்து போனதே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா
உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)
உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே…
பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே – (2)
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து…
1. நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே
நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே – (2)
ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே
கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே – (2)
நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன்
நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் – (2)
மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே – (2)
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து…
2. கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை
தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை – (2)
தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால்
தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் – (2)
எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே
தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே – (2)
சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன் – (2)
இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – இந்தப் பாவி நான்
இனிமேலும் உம்மை விட மாட்டேன் – காலங்கள் கடந்து…