Kadavulae Makkalinathaar ummai song lyrics

கடவுளே மக்களினத்தார் உம்மை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs and Roman Catholic Songs collection.

கடவுளே மக்களினத்தார் உம்மைப்
போற்றிப் புகழ்வார்களாக (2)
கடவுளே எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக
உம்திரு முகத்தின் ஒளியை எம்மீது வீசுவீராக
அப்பொழுது உலகம் உமது வழியை (2)
அறிந்து கொள்ளும் மீட்பை உணரும்
வேற்று நாட்டினர் அக்களித்து என்றும் மகிழ்ச்சியுடன் பாடுவர் (2)
மக்களினங்களை நீர் நேர்மையில் ஆள்கின்றீர் (2)
நாடுகளை வழிநடத்துகின்றீர்