kaerith aatrangkaraiyil nerutru

கேரித் ஆற்றங்கரையில் நீரூற்று

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

கேரித் ஆற்றங்கரையில் நீரூற்று வற்றிப் போனாலும்
மேரிபாவின் ஊற்றாண்டை கண்ட தேவன்
உன்னையும் கண்டுவார்
எலியா ஓ எலியா தேவன்
உன் வாழ்வில் ஒளியா
தீர்க்கனின் பசி தீர்க்க
காகம் விரைந்தது அன்றோ அன்று
உந்தனின் தாகம் தீர்க்க
தேவன் வருகின்றாரே தேவன்
சமாரியா கிணற்றண்டையில்
அந்த ஸ்திரீயை கண்ட தேவன்
உன்னையும் கண்டுவார்
உன் தாகம் தீர்த்திடுவார்
சமாரியா ஓ சமாரியா இயேசு உன்
வாழ்வில் நல்ல சமாரியன்
கடலில் வலை வீசி
வெறுமையாய் நிற்க்கின்றாயே
இயேசு வருகின்றார் என்
படகை நிரப்பிவிடுவார்
பேதுரு ஓ பேதுரு
இயேசுவின் வாழ்வில் கேதுரு