kaiyalikkinren iraiva – Kaiyalikkindren Iraiva

கையளிக்கின்றேன் இறைவா
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

கையளிக்கின்றேன் இறைவா – Kaiyalikkindren Iraiva
கையளிக்கின்றேன் இறைவா – எந்தன்
மெய்ப்பொருள் ஆவி அனைத்தையும் உமக்கு
கையளிக்கின்றேன் இறைவா
வாழ்க்கையை விட எந்தன் வளமையை விட உந்தன்
அருள் நிலை ஒன்றே மேலானது
வாழ்க்கையில் உம்மை வாழ்த்துவது – எல்லா
வரங்களையும் விட மேலானது
செழுமையும் கொழுமையும் பெறுவது போல் எந்தன்
இதயமும் உமதுமுன் நிறைவு பெறும்
முழுமை என் உள்ளமதை நிரம்பிடவே – நாவில்
மகிழ்ச்சியின் புகழ்ச்சியின் பாடல் எழும்