kakkum nal thevan namakkenrume

காக்கும் நல் தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

காக்கும் நல் தேவன் நமக்கென்றுமே
காத்திடுவார் என்றும் கண்மணிப்போல்
கண்ணோக்கும் நல் மீட்பர் நமக்கென்றுமே
காப்பார் தினந்தோறும் இமைப்பொழுதும்
உம்மோடு தான் உறவாடுவேன் உம்
அன்பில் நெகிழ்ந்திடுவேன். – ( 2 ) – காக்கும் நல்
1) நிந்தைகள் நம் எல்லையை
நெருங்காமல் அரணாகுவார் -(2)
தீதொன்றும் சூழ்ந்திடாமல்
எந்நாளும் காத்திடுவார் – ( 2 ) – – காக்கும்
2) வழியறியா இடறலெல்லாம்
உம் தூதர்கள் ஏந்திடுவார் -(2)
கொள்ளை நோய் யுத்தத்திலும்
வென்றேகி முன்செல்வேனே – ( 2 ) – -காக்கும்